தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமூக வலைதளங்களில் வெளியிட்ட “ரீல்ஸ்” வீடியோ பதிவு ஒன்று தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், தமிழகம் தனது எதிர்காலத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கவில்லை, அதைத் தாங்கள் கட்டமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோப்புகள் மற்றும் அரசு ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை என்றும், அந்த குறையைச் சரிசெய்யவே முதலமைச்சர் விஜய் தன்னை இந்தத் துறையில் நியமித்துள்ளார் என்றும் அவர் பேசியுள்ளார்.
<a href=”http://
Resembling a fancy dress competition where a naive participant recites under the topic,If I would be an Industries & Commerce minister.
People of TN need meaningful jobs,
Sustainable economic policies,
Transparency in execution.Simply…
Modern,by thoughts.
Not by attire. https://t.co/OI1GQXvyYr— கோவை கார்த்திகா (@Karthika_MCK) May 27, 2026
“>
மேலும், தொழில்துறையினருக்குத் தேவையான அனுமதிகளை வெறும் 21 நாட்களுக்குள் விரைவாக வழங்கவும், ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் அளிக்கவும் த.வெ.க அரசு உறுதியளிப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். தொழில் தொடங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதைப் பற்றித் தனக்கோ அல்லது முதலமைச்சருக்கோ நேரடியாகத் தெரிவிக்கலாம் என்றும்,
முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் தமிழகத்தை இந்தியாவின் முதலீட்டு மையமாக மாற்ற உறுதியுடன் செயல்படுவதாகவும் கூறி, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சரின் இந்த மாடர்ன் பாணி ரீல்ஸ் வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தற்போது தீப்பிடித்துள்ளன.
