துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமக்கு முறையாகப் பணம் தரவில்லை என்று பாடகி கெனிஷா சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியிருந்தார். இதனை அவருடைய தோழி அருணாவும் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனால், தங்களைப் பற்றி அவதூறு பரப்பியதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம், பாடகி கெனிஷா மற்றும் அவருடைய தோழி அருணா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு ₹1,29,684 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
