மும்பையில் கார் ஓட்டுநர் ஒருவருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே கார் வாடகை கட்டணம் தொடர்பாக நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கர மோதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் பணப் பிரச்சனைக்காக ஆரம்பமான இந்த வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களில் ஒரு பொது இடத்தில் அநாகரிகமாக கத்தி சண்டை போடும் அளவுக்குக் கைமீறிப் போனது. இதை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இது ஏதோ ‘WWE’ குத்துச்சண்டை போட்டி போலவும், ரியாலிட்டி ஷோ சண்டை போலவும் இருப்பதாகக் கமெண்ட் செய்து மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். அதே சமயம், மும்பை போன்ற பெருநகரங்களில் டிரைவர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே இது போன்ற கட்டணப் பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் நாளுக்கு நாள் அன்றாட நிகழ்வாக மாறி வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.