விளையாட்டுத் துறையில் திறமைக்கும், திறனுக்கும் வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 4 வயது 4 மாதமே ஆன ஒரு சிறுவனின் கிரிக்கெட் பேட்டிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 15 வயதில் அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷியுடன், இந்த 4 வயது சுட்டிப் பையனை நெட்டிசன்கள் தற்பொழுது ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

​ஆரம்பத்தில் ஏதோ ஒரு கியூட் வீடியோ என்று நினைத்துப் பார்க்கும் மக்களுக்கு, அடுத்த சில நொடிகளிலேயே இந்தச் சிறுவன் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறான். தலையில் ஹெல்மெட், காலில் பேடு அணிந்து கொண்டு, தன்னை விட வயதில் பெரிய பௌலர்கள் வீசும் பந்துகளை பயமே இல்லாமல் ஸ்ட்ரெயிட் டிரைவ், புல் ஷாட் என நெட்ஸ் முழுக்க சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிடுகிறான்.

இந்தச் சிறுவனின் அசாத்திய டைமிங் மற்றும் கண்-கை ஒருங்கிணைப்பைப் பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகிறது.