தமிழக முதல்வர் விஜய் இரண்டு நாள் பயணம் ஆக டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்து பத்து நிமிடங்கள் உரையாடினார். அப்போது பல முக்கிய கோரிக்கைகளை அவர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநில ஒப்புதல் இல்லாமல் மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர் வலதுறை ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் பாடலை முதலில் பாடுவதற்கு உரிய தெளிவுரை வழங்குக என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது முதல்வர் பதவி ஏற்பு விழா முதல் அடுத்தடுத்து நடந்த பல விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்தந்த மாநில அரசுகளின் பாடல்கள் முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
