தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அளவிற்குக் கடுமையான திருப்பங்களையும் பரபரப்புகளையும் சந்தித்து வருகிறது. நேற்று அதிமுக-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் (சத்யாபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார்) அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இந்த மெகா அதிர்ச்சி அரசியல் வட்டாரத்தில் அடங்குவதற்குள், இன்று மேலும் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பலத்த சரிவைச் சந்தித்து வரும் நிலையில், தவெக-வின் பலம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் தமிழக சட்டசபை மற்றும் அரசியல் களம் சும்மா அனல் பறந்து கொண்டிருக்கிறது.
