தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
அவர் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவருக்குத் திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, முதலமைச்சர் விஜய் மீது பொதுமக்களைப் போலவே தாமும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
திரைத்துறையைச் சேர்ந்த விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், விஜய்யின் இந்த புதிய வருகையால் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
