தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன.

அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடலைக் கண்டு கதறிய உறவினர்கள், “நாய் குதறியது போல் சடலம் சிதைந்து போயிருக்கிறது; முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கண், காது, மூக்கு என எதுவும் இல்லை” என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

இந்த பயங்கரத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், “எங்கள் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள், இதைப் பார்க்கும் போது உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?” என போலீசாரிடம் ஆவேசமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது பிரேத பரிசோதனை முடிந்து, சிறுமியின் உடல் அவளது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையில், அந்தப் பகுதியே சோகத்திலும் பதற்றத்திலும் உறைந்து போயுள்ளது.