காங்கிரஸ் தயவில் தமிழ்நாட்டை ஆண்டு வரும் பொய்க்கால் குதிரை அரசு, காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்த்துப் பேச முடியுமா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் மிகக் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது.

“மாநில உரிமைகளில் சமரசமே இல்லை என்று விக்கிரவாண்டி மாநாட்டிலேயே அறிவித்துவிட்டு அரசியலுக்கு வந்த இயக்கம் தவெக” என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முதலமைச்சரான வெற்றித் தலைவர் விஜய் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்றும், காவிரி முதற்கொண்டு எந்தவொரு நீர்வள உரிமையையும் எவரிடத்திலும் அடகு வைக்கவோ, அடிபணிந்து போகவோ மாட்டார் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

தவெக அரசைப் பொய்க்கால் குதிரை அரசு என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமியைத் தனிப்பட்ட முறையிலும் அந்த அறிக்கை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. “பதவிக்காகப் பா.ஜ.க.வின் கால்களில் விழுந்து வணங்கி, பம்மிப் பதுங்கித் தவழ்ந்தே பதவியைக் காப்பாற்றிக் கொண்டவர் நம்மைப் பார்த்துப் பேசுவது வினோதமாக சிரிக்க வைக்கும் காமெடி” என்று தவெக சாடியுள்ளது.

மேலும், அமைச்சரவையில் இருந்தே ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற சமூக நீதிக் கோட்பாட்டைச் செயலில்காட்டியது தான் முதலமைச்சரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி என்றும், கூட்டணி, கொள்கை, மாநில உரிமை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தெளிவாகப் புரிந்து மக்களுக்கு விசுவாசமாக இருக்கும் இந்த ஆட்சியைப் பற்றி, ஏற்றிவிட்டவர்களை எட்டி உதைக்கும் ‘விஷவாசிகளுக்கு’ புரிய வாய்ப்பில்லை என்றும் தவெக ஐடி விங் தனது அறிக்கையில் கொந்தளித்துள்ளது.

“>