தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களை, காலிப் பணியிடங்கள் உள்ள பிற கடைகளுக்குப் பணிநிரவல்  செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், மூடப்பட்ட கடைகளின் ஊழியர்களைப் பணி மூப்பு (Seniority) அடிப்படையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கடைகளில் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடைகளில் பணிநிரவல் செய்தது போக எஞ்சியிருக்கும் பணியாளர்களைத் டாஸ்மாக் கிடங்குகள் (Warehouses) மற்றும் மாவட்ட அலுவலகப் பணிகளில் பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்ற நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி விரைந்து முடிக்குமாறு டாஸ்மாக் தலைமை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.