தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச் சிறிய ஆறுதலை அளித்துள்ளது.
சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,780-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதிரடியாகச் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,17,840-க்கும், ஒரு கிராம் ரூ.14,730-க்கும் விற்பனையாகிறது.
அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,95,000-க்கும் முந்தைய நாளின் விலையிலேயே நீடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
