சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் இருவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சோகத்துடன் தனது தாயாரிடம் கூற, அவர் மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றச்சாட்டிற்கு உள்ளான இரண்டு கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு சிறுவர் காப்பகத்தில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, கைதான சிறுவர்களில் ஒருவன் சமீபத்தில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தான்.

அவன் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்குச் சற்று முன்பாகத்தான், அத்தேர்வில் அவன் 500-க்கு 470 மதிப்பெண்கள் எடுத்துப் பிரம்மாண்டமாகத் தேர்ச்சி பெற்றிருந்த விபரம் போலீசாருக்குத் தெரியவந்தது. “படிப்பில் இவ்வளவு‌ மதிப்பெண்ணை நினைத்துப் பெற்றோரோ அல்லது இந்தச் சமூகமோ பெருமைப்பட முடியாத அளவுக்கு அவனது கொடூர செயல் அமைந்துவிட்டதே” என்று
போலீசார் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.