இந்தியாவின் வரலாற்றையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ‘அல்-பத்ர்’ அமைப்பின் ஆபரேஷனல் கமாண்டர் ஹம்சா பர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்று அங்குள்ள பயங்கரவாத அமைப்பில் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபட்டு வந்ததாகப் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று (மே 21) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பர்ஹான் மீது குண்டுகள் துளைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அந்நியன் பட பாணியில்” அடுத்தடுத்து இந்திய எதிரிகளை பாகிஸ்தான் மண்ணிலேயே மர்ம நபர்கள் காலி செய்து வருவது, சர்வதேச பாதுகாப்பு வட்டாரத்தில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.