தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர். தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்த கூட்டணிக் கட்சிகளுக்குள் புகைச்சல் நிலவுவதாகவும், ஆட்சி ஸ்திரத்தன்மை இழக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த சூழலில், டெல்லி மேலிடத்தின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் நாளை (மே 21) நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாவில் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளதால், கோட்டை வட்டாரம் தற்போதே பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

“>