சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண சங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,18,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16901 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,28,728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், ஒரு சவரன் 2,85,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.