தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜயின் அடுத்தடுத்த ஆக்சன்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்புகளை வழங்கினார். அப்போது அந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் விஜய் அவரே நேரடியாக ஓட்டி பார்த்து தொடங்கி வைத்தார்.
40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து, ஓட்டி பார்த்த முதல்வர் விஜய் #cmvijay #ambulance #tngovt #thanthitv pic.twitter.com/RVL3O2CERL
— Thanthi TV (@ThanthiTV) May 20, 2026
மேலும் ஒரு சாதாரண அரசு அதிகாரி போல காலை 9:55 மணிக்கு தலைமை செயலகத்திற்கு வரும் முதலமைச்சர் விஜய் மாலை 4:00 மணி அளவில் வீட்டிற்கு கிளம்புகிறார். அவர் மதிய உணவை கூட கையில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார். மேலும் அவரது எளிமையை கண்டு அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் வியந்துள்ள நிலையில் தற்போது மிகவும் எளிமையாக வாகனங்களை அவரே ஓட்டி பார்த்து வழங்கியது வரவேற்பை பெற்றுள்ளது.
