தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மதச்சார்பற்ற மற்றும் சமூகநீதி கொள்கையுடைய தலைவர்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற முதலமைச்சரின் விருப்பத்தின்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு தவெக அரசு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றபோது, விசிக அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதைச் சுட்டிக்காட்டி, தற்போதைய அமைச்சரவை விரிவாக்கத்தில் அண்ணன் திருமாவளவன் தலைமையிலான விசிக பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சமூகநீதி அடிப்படையில் அமையவுள்ள இந்த புதிய அரசியல் நகர்வு, தவெக – விசிக கூட்டணியை மேலும் பலப்படுத்துவதுடன், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“>