தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சரத்குமார் அவர்கள் திடீர் ஆய்வு (Surprise Raid) மேற்கொண்டு, அங்கிருந்த வசதிக் குறைபாடுகளைக் கண்டு அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஸ்பாட்டிலேயே லெப்ட் ரைட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளைச் சில ஊழியர்கள் இழிவாகப் பேசுவதாகவும், ஒருமையில் நடத்துவதாகவும் வந்த புகாரை அடுத்து, அங்கிருந்த மருத்துவர்களிடம் அவர் நேரடியாகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “நோயாளிகளை இழிவாகப் பேசுவது, ஒருமையில் பேசுவது இதெல்லாம் இனிமேல் சகித்துக் கொள்ளப்படாது” என்று அவர் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார்.

​தொடர்ந்து மருத்துவமனையை ஆய்வு செய்த அவர், அங்குப் போதிய தண்ணீர் வசதி இல்லாததைக் கண்டு ஒப்பந்ததாரர் (Contractor) மற்றும் அதிகாரிகளை வெளுத்து வாங்கியுள்ளார். “அரசு மருத்துவமனையில தண்ணீர் இல்லாதது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா..? ஒரு வேலையும் இங்க சரியா நடக்கல! இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது சரிங்களா..? எப்போ வேணும்னாலும் நான் திரும்ப வருவேன், ஒழுங்கா வேலை நடக்கணும்” என்று தவெக MLA சரத்குமார் எகிறிய மாஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு இணையத்தையே அதிர வைத்து வருகிறது.