சென்னை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரத்குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் நோயாளிகளுக்குக் குடிநீர் வசதி கூட இல்லாத அவல நிலையைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை (Contractor) நேரில் அழைத்து, “நோயாளிகளை இழிவாகப் பேசுவது, ஒருமையில் நடத்துவது போன்ற செயல்களை இனிமேல் சகித்துக் கொள்ள முடியாது; அரசு மருத்துவமனையில் அடிப்படை தேவையான தண்ணீர் கூட இல்லாதது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?” என்று சம்பவ இடத்திலேயே மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது, எப்போது வேண்டுமானாலும் நான் மீண்டும் ஆய்வுக்கு வருவேன்” என்று எச்சரித்த எம்.எல்.ஏ சரத்குமார், பணிகளைச் சரியாகச் செய்யாதவர்களை லெப்ட் ரைட் வாங்கி அதிரடி காட்டினார். தவெக சட்டமன்ற உறுப்பினரின் இந்த அதிரடி ‘ஸ்பாட் ஆக்ஷன்’ (Spot Action) மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் ‘பகீர்’ கிளப்பியுள்ள அதேவேளையில், தொகுதி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நோயாளிகளை இழிவாக பேசுவது, ஒருமையில் பேசுவது இதெல்லாம் கூடாது..!
அரசு மருத்துவமனைல தண்ணீர் இல்லாதது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா..? ஒரு வேலையும் சரியா நடக்கல.. இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது சரிங்கலா..? எப்போ வேண்டும்னாலும் திரும்ப வருவேன்..
தாம்பரம் அரசு தலைமை… pic.twitter.com/Q9ehfDqV1J
— Polimer News (@polimernews) May 19, 2026
“>
