தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 513 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மீதமுள்ள 204 கடைகளையும் இந்த வார இறுதிக்குள் முழுமையாக மூடிவிட்டு, அதுகுறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.