சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது அறையின் அழகிய டைல்ஸ்களை வெவ்வேறு கோணங்களில் கேமராவில் பதிவு செய்து காட்டுகிறார்.
அப்போது தற்செயலாக சுவருக்கும் டைல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதியை ஜூம் செய்து பார்க்கும்போது, அங்கே ஒரு நீண்ட பாம்பு ஒளிந்திருப்பது தெரியவருகிறது.
அறையின் வெள்ளை மற்றும் சாம்பல் நிற டைல்ஸ் டிசைனோடு, அந்தப் பாம்பின் உடலின் நிறமும் அதன் மேல் இருந்த புள்ளிகளும் அப்படியே ஒத்துப்போயிருந்ததால், முதல் பார்வையில் அங்கே பாம்பு இருப்பது யாருக்குமே தெரியவில்லை.
தாங்கள் தூங்குவதற்குத் தயாரான போதுதான் இந்த பாம்பைக் கவனித்ததாக அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறார். அறையில் இருந்தவர்கள் பயந்துபோய், “அது நம்மளையே பார்க்குது, நாமளும் அதையே பார்க்குறோம்” என்று பதற்றத்துடன் பேசுவதும் அதில் கேட்கிறது.
Yeh kya dekh liye bhai 😳 pic.twitter.com/VfukqKfFP6
— Godman Chikna (@Madan_Chikna) May 18, 2026
“>
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், இயற்கையின் இந்தத் தகவமைப்புத் திறனைப் பார்த்து வியந்தாலும், அதே சமயம் இவ்வளவு ஆபத்தான ஒரு விலங்கு நம் கண்ணெதிரே மறைந்திருப்பது பெரும் பயத்தை ஏற்படுத்துவதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், வெறும் வீடியோவை மட்டும் வைத்து அது என்ன வகையான பாம்பு அல்லது அது விஷமுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
