தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்கிருந்த குடியிருப்புப் பகுதி ஒன்றின் சிசிடிவி கேமராவில் இந்த முழுச் சம்பவமும் பதிவாகியுள்ளது. பகல் நேரத்தில், மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணிடம் இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கோபத்தை உண்டாக்கியுள்ளதுடன், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரி சைபராபாத் காவல்துறை மற்றும் ‘ஷீ டீம்’ எனப்படும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவினருக்குப் பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
@TelanganaCOPs @hydcitypolice @TelanganaDGP
He should be punished openly .. this should become lesson for others.
This is #Telangana Not #UP or #Bihar
We can’t tolerate harassments towards women. https://t.co/hU7IZTOaKM— Riyaz Shaik (@Riyazshaik11) May 19, 2026
“>
இத்தகைய செயல்களைச் சாதாரண குறும்பு என்று கடந்து போகாமல், ஆரம்பத்திலேயே கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், பொது இடங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் மீண்டும் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
