பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டே மற்றும் அவரது தொழிலதிபர் கணவர் விக்கி ஜெயின் இருவரும் எப்போதும் தங்களது சொகுசு வாழ்க்கை மற்றும் விலை உயர்ந்த வீடுகள் தொடர்பான புகைப்படங்களைச் பகிர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள்.
மும்பை மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மிகப்பிரம்மாண்டமான வீடுகளைக் கொண்டுள்ள இந்த ஜோடி, தற்போது தங்களது ஆடம்பர வாழ்க்கையைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, மாட்டுத் தொழுவத்தில் சாணம் அள்ளும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
View this post on Instagram
மும்பையின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடைபெற்று பெங்களூரு சென்றுள்ள இந்த ஜோடி, அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கோசாலைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு பசுக்களுக்குத் தீவனம் வைப்பது, தொழுவத்தைச் சுத்தம் செய்வது மற்றும் சாணம் அள்ளுவது எனப் பசு சேவையில் முழுமையாக இறங்கியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய அங்கிதா, “பசுக்களுக்குச் சேவை செய்வது எங்களுக்கு எந்தப் பயத்தையும் தரவில்லை, மாறாக அவை எங்களை அன்புடன் அணைத்துக் கொண்டது போன்ற உணர்வைத் தந்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “பணம், புகழ் இருந்தாலும் மனிதாபிமானமும் ஆன்மிகமும் முக்கியம்” என ரசிகர்கள் இவர்களைப் பாராட்டி வருகின்றனர்.
