தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே. ராஜன் அவர்களின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கே. ராஜன் அவர்களின் இழப்பு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும் என முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் தனது நெஞ்சார்ந்த ஆறுதல்களையும் அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் கே. ராஜன் தமிழ் சினிமா உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். தரமான திரைப்படங்களைத் தயாரித்தது மட்டுமின்றி, சினிமா தொடர்பான பொதுமேடைகளிலும், விவாதங்களிலும் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வந்தவர்.
இந்நிலையில் இவரது மறைவு திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த இரங்கல் செய்தி, மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்தினருக்கும் மற்றும் திரையுலகினருக்கும் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான
திரு. கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி#CMJosephVijay pic.twitter.com/ZWN3ss4nwh— CMOTamilNadu (@CMOTamilnadu) May 18, 2026
“>
