தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இளம் நடிகையான ஸ்ரீலீலா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா ஆகிய இருவரையும் இணைத்து பரவி வந்த காதல் வதந்திகளுக்கு, நடிகையின் தாயார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ரீலீலாவும், கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் காதலித்து வருவதாகவும், இருவரும் ‘ரிலேஷன்ஷிப்பில்’ இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறி, காட்டுத்தீ போல் பரவியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீலீலாவின் தாயார் விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் உலா வரும் இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. இப்படியெல்லாம் எப்படி கதைகளை உருவாக்குகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. இந்த வதந்திகளில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த பரபரப்பான வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.