அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே பெய்ஜிங்கில் கடந்த மே 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் உச்சிமாநாடு குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இந்த மாநாட்டில் விவசாயம், விமான போக்குவரத்து, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஏஐ சிப்ஸ் போன்ற முக்கியத் துறைகளின் முன்னணி நிறுவன அதிபர்களுடன் டிரம்ப் கலந்துகொண்டார். ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் வரவிருக்கும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் சுங்கவரி சலுகை நீட்டிப்பு ஆகியவை குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தச் சந்திப்பை ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று வர்ணித்ததோடு, டிரம்பிற்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் ஆடம்பர அரசு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த உபசரிப்பால் ஈர்க்கப்பட்ட டிரம்ப், வரும் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு வருமாறு சீன அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ விவாதங்களை விட, பின்னணியில் இருந்த ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் விசித்திரமான வதந்திகளும் உளவு கோட்பாடுகளும் பரவி வருகின்றன.
மாநாட்டின் போது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் சாதாரண ஊழியர்கள் அல்ல என்றும், அவர்கள் பயிற்சி பெற்ற உளவுத்துறை ஏஜெண்டுகள் என்றும் நெட்டிசன்கள் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Footage of waiters during Trump’s China visit sparked 1 discussion online:
“Every waiter is either a trained intelligence operative or a spy.” pic.twitter.com/rHtBZJuXIv
— News Algebra (@NewsAlgebraIND) May 17, 2026
“>
ஒரு தரப்பினர் இதைக் கிண்டல் செய்து “அமைதியாகத் தண்ணீர் பரிமாறியவரை நெட்டிசன்கள் ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக மாற்றிவிட்டனர்” என்று கூறினாலும், மற்றொரு தரப்பினர் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சைபர் பாதுகாப்பு மற்றும் உளவு பார்க்கும் அரசியல் போட்டியை முன்வைத்து இந்த வீடியோக்களைத் தீவிரமாக ஆராய்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
