ஜிம்மில் ஒருவர் தனியாக பெஞ்ச் பிரஸ் எனப்படும் பளுதூக்கும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த பார்பெல் லோடை தூக்க முடியாமல் அவரது நெஞ்சின் மீதே அது இறங்கியது.

மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான அந்த இக்கட்டான நொடியில், அவர் சற்றும் பதற்றமடையாமல் ஒரு புத்திசாலித்தனமான செயலை செய்தார்.

பார்பெல் கம்பியின் இருபுறமும் இருக்கும் எடைகளை லாக் செய்யும் ‘கிளிப்களை’ அவர் முன்பே மாட்டாததால், தனது உடலை ஒருபுறமாக மெதுவாக சாய்ந்து, எடைக் கற்களை ஒவ்வொன்றாக கீழே நழுவவிட்டார்.

“>

 

இதனால் பார்பெல் எடை குறைந்து, அவர் நூலிழப்பில் உயிர் தப்பினார். உடற்பயிற்சி கூடங்களில் ‘சேஃப்டி பார்’ இல்லாமல் தனியாக பயிற்சி செய்யும்போது, இது போன்ற சமயங்களில் பார்பெல் லாக் செய்யாமல் இருப்பதே தற்காப்புக்கு உதவும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.