தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் அதன்பிறகு தெறி, பிகில் மற்றும் மெர்சல் உள்ளிட்ட பல படங்களை எடுத்துள்ளார். இவர் ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை இயக்கிய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவரது மனைவி பிரியா அட்லீக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

 

ஏற்கனவே இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது தங்களுடைய பெண் குழந்தைக்கு வைத்துள்ள பெயரை அட்லி மற்றும் பிரியா அறிவித்துள்ளனர். அதன்படி அவர்கள் தங்களுடைய குழந்தைக்கு மியோ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.