ததலைநகர் டெல்லியில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, டெல்லி அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, டெல்லியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work From Home) முறையைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

​எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கவும், வாகனப் புகையைக் குறைக்கவும் டெல்லி அரசு ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு இந்த விதிமுறையைக் கட்டாயமாக்கியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது தனியார் ஐடி மற்றும் இதர நிறுவனங்களுக்கும் இந்த அதிரடி உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் டெல்லியில் உள்ள லட்சக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு, இந்த செய்தி சோஷியல் மீடியாவில் பயங்கர ரீச் கொடுத்து வருகிறது.