தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் கடும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் போட்டியாக நடிகர் அருண் விஜய் களமிறங்கியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. “சினிமா துறையில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கையாள, எந்தவொரு அனுபவமும் இல்லாத ராஜ்மோகன் எப்படி சரியாக இருப்பார்?” என விஷால் கேள்வி எழுப்பியிருந்த பதிவு அரசியல் மற்றும் திரைத்துறையில் புயலைக் கிளப்பியது.

​விஷாலின் இந்த அதிரடி விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “தமிழக முதல்வர் விஜய்யின் முடிவுகளில் யாரும் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்” என அவர் ஓப்பனாகக் குறிப்பிட்டிருப்பது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முதல்வர் விஜய்க்கு ஆதரவாக அருண் விஜய் களமிறங்கியிருப்பது, கோலிவுட் நட்சத்திரங்களுக்கு இடையேயான மோதலைத் தற்பொழுது உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.