பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை “தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று நேற்று காலை உருக்கமாகக் கோரிக்கை வைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடியாகவும் மனிதாபிமானத்துடனும் களமிறங்கியுள்ளார். முத்துக்காளையின் கோரிக்கையை அறிந்த உடனே முதலமைச்சர் விஜய் அவர்கள், ஆதவ் அர்ஜுனா அவர்களை அழைத்து முத்துக்காளையிடம் தொலைபேசியில் பேசும்படி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த உடனடி ஆக்ஷன் முத்துக்காளை குடும்பத்தினருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
உடனே நடிகர் முத்துக்காளையை சென்று ஹாஸ்பிடலில் பாருங்கள் என உத்தரவிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் ! 🥹❤️🙏
"தனது மனைவியின் உயிரை காப்பாற்றுகள்' என இன்று காலை நடிகர் முத்துக்காளை கோரிக்கை வைத்ததும், முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக @AadhavArjuna அவர்களை அழைத்து… https://t.co/NUchK8fSg5 pic.twitter.com/oT5KKBoCKz
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 16, 2026
அதனைத் தொடர்ந்து, நேற்று மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை நேரடியாக அனுப்பி முத்துக்காளையின் மனைவியை நலம் விசாரிக்க வைத்ததுடன், அவருக்குத் தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளையும் உடனடியாக வழங்க முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். “உடனே நடிகர் முத்துக்காளையைச் சென்று ஹாஸ்பிடலில் பாருங்கள்” என்று நேற்று முதலமைச்சர் விஜய் பிறப்பித்த இந்த அதிரடி உத்தரவு மற்றும் அமைச்சரின் நேரடி வருகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி, புதிய அரசுக்கு மக்களிடையே பெரும் பாராட்டு மழையைக் குவித்து வருகிறது.
