சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க-வின் கீர்த்தனா அவர்கள், கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிரடி வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. மேடையில் பேசிய அவர், “அதிமுக ஆகட்டும், திமுக ஆகட்டும் அவர்களைப் போலத்தான் நாமும் என்று மக்கள் சொல்லும் படியாக நாம் ஒருபோதும் நடந்து கொள்ளக்கூடாது; என் பெயரைச் சொல்லியோ அல்லது நமது அண்ணன் பெயரைச் சொல்லியோ யாரும் காசு வாங்கவும் கூடாது, ஊழல் செய்யவும் கூடாது” என்று கட்சித் தொண்டர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா பேச்சு 🔥 pic.twitter.com/pop4YWceou
— ❤️🔥 (@VigneshRb11) May 16, 2026
மேலும், “ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அதிகாரிகள் முன்னிலையில் யாரும் அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது; இதற்கு முன்பு எப்படி மரியாதையுடன் பணிவுடன் இருந்தோமோ, அதேபோலவே இப்போதும் நடந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தங்களது அண்ணன் விஜய் அவர்கள் தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை தனது கடமையை எப்படி ஒழுக்கத்துடன் செய்து வருகிறார் என்பதைச் சுட்டிக்காட்டி, அவரைப் போலவே த.வெ.க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். புது ஆட்சியில் அமைச்சரே தொண்டர்களுக்கு இப்படி ஒரு நறுக் கட்டுப்பாட்டை விதித்திருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
