தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவியேற்ற அன்று “தமிழக கஜானாவில் போதிய பணம் இல்லை, கஜானா காலியாக இருக்கிறது” என்று பேசியிருந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிராகப் பல எதிர்க்கட்சித் தலைவர்களும், குறிப்பாகத் திமுகவினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். “பதவியேற்ற உடனே கஜானா காலி என்று சொன்னால் எப்படி? மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதையும் செய்யலாம்” என்று விஜய்க்கு எதிராகப் பல கமெண்ட்டுகள் பறந்தன.
உதயநிதி அதிமுக மொத்த கஜானாவ தொடச்சி எடுத்திட்டுப்போய்ட்டாங்கனு சொன்னா அப்போ வாயில குச்சிமுட்டாயி வெச்சிமாரி இருந்துச்சி..!!
இப்போ விஜய் திமுகவ மொத்த கஜானாவும் காலிப்பன்னிட்டாங்க சொன்னதுக்கு மொத்த கொத்தடிம கூட்டமும் கதறிக்கிட்டு கிடக்கானுங்க..!!😄😄 pic.twitter.com/y3HHXvMnv8
— vijay 🅱️askar vfc (@vijaybaskar240) May 16, 2026
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, த.வெ.க-வினர் தற்போது சோசியல் மீடியாவில் பழைய வீடியோ ஒன்றை எடுத்துத் தீயாய் வைரலாக்கி வருகிறார்கள். கடந்த காலப் பிரச்சாரம் ஒன்றில் பேசிய திமுகவின் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக ஆட்சியை விட்டுப் போகும்போது ஒட்டுமொத்த கஜானாவையும் காலி பண்ணிவிட்டு, கடனை மட்டும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்” என்று பேசிய வீடியோவைத்தான் இப்போது த.வெ.க-வினர் கையில் எடுத்துள்ளனர். “உதயநிதி ஸ்டாலின் சொன்னால் அது நியாயம், அதே கஜானா மேட்டரை முதலமைச்சர் விஜய் சொன்னால் மட்டும் தப்பா?” என்ற ரீதியில் த.வெ.க-வினர் எழுப்பியுள்ள இந்த நறுக் கேள்விகள், இணையத்தில் திமுக மற்றும் த.வெ.க தொண்டர்களிடையே உச்சகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ளது.
