இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், கிராமப்புறங்களில் அது 4.3 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது இதன் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வேலையின்மை விகிதம் உயர்வு!#UnemploymentRate | #UnEmployment | #Jobless | #Employment | #Economy pic.twitter.com/UIsfOTo6I5
— PttvOnlinenews (@PttvNewsX) May 16, 2026
“>
நகரங்களில் வேலைவாய்ப்புகள் ஓரளவுக்கு அதிகரித்தாலும், கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகள் குறைந்திருப்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புத் துறைக்கும் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
