திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் விஜய் ‘ஷாப்பிங்’ செய்வதாக, அதாவது குதிரை பேரம் பேசித் தன் பக்கம் இழுப்பதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைப் பாசினார்.
“தன் ஆட்சி மீது முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது தனக்கு ஆதரவு அளித்தவர்கள் மீதுதான் அவருக்கு நம்பிக்கை இல்லையா?” என்று ஸ்டாலின் மேடையிலேயே அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அதிரடி கிளப்பியுள்ளார். மேலும், தவெக அரசின் நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்கிய மு.க.ஸ்டாலின், எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கல்வி நிதியைக் கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிச் சாடினார்.
“இப்படித்தான் செய்ய முடியும்.. ஏன்னா இது சினிமா இல்ல, ஆட்சி நிர்வாகம்” என்று முதலமைச்சர் விஜய்க்கு மிக நேரடியான பஞ்ச் ஒன்றையும் அவர் வைத்துள்ளார். சினிமாத் தனமாக ஆட்சியை நடத்த முடியாது என்பதைச் சொல்லி ஸ்டாலின் நடத்தியுள்ள இந்த ஆக்ரோஷத் தாக்குதல், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
