அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசை வீழ்த்துவதற்கு செம லேட்டஸ்ட்டான டிஜிட்டல் வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். “தவெக கட்சி எந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகத் தேர்தலில் வெற்றி பெற்றதோ, அதே ரீல்ஸ் அஸ்திரத்தையே நாமும் கையில் எடுத்து வெற்றி பெறுவோம்” என்று அவர் அதிரடியாக முழங்கியுள்ளார். தற்போதைய விஜய் அரசின் தவறுகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாகத் தான் அடிமட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் பாரம்பரிய அரசியல் பிரச்சாரங்களை விட, சோஷியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடியார் அறிவுறுத்தியுள்ளார். புது யுக அரசியலுக்கு ஏற்ப அதிமுகவும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தவெக-வின் அதே பாணியில் சென்று அவர்களைத் தட்டித் தூக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த “ரீல்ஸ் அரசியல்” வியூகம், தற்போது சோஷியல் மீடியாவிலும் அரசியல் வட்டாரத்திலும் செம ட்ரெண்டாகி வருகிறது.
