லோக் சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை, பா.ஜ.க-விற்கு சாதகமாக அமைவதோடு ‘இந்தியா’ கூட்டணியைப் பலவீனப்படுத்துவதாக சி.பி.ஐ மூத்த தலைவர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில், தனக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே அரசியல் ரீதியான போட்டிகள் இருப்பதால் அவரைக் கட்டிப்பிடிக்க முடியாது என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
மேலும் இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பினராயி விஜயன், ராகுல் காந்தியின் இத்தகைய பிடிவாதமான மற்றும் முதிர்ச்சியற்ற அணுகுமுறையே எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். ராகுல் காந்தி கூட்டணியை வலுப்படுத்துவதை விடுத்து, பா.ஜ.க-விற்கு உதவும் வகையில் செயல்படுவதாகக் குறிப்பிட்ட பினராயி விஜயன், தமக்கு அனைவரையும் கட்டிப்பிடிக்கும் வழக்கம் இல்லை என்றும், ஆனால் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் கட்டிப்பிடித்த புகைப்படத்தை நாம் பார்த்துள்ளோம் என்றும் சாடினார்.
