கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தனது குடும்பத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்காகப் புதிய ஆட்டோக்களையும் இலவசமாக வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சவுந்தர்யா, “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எங்களது குடும்பத்தின் நீண்ட நாள் எண்ணம்;எனது தந்தை ரஜினிகாந்த் ஏற்கனவே பல நற்பணிகளைச் செய்து வருகிறார். நான் எனது சமூகச் சேவையை இந்தச் சங்கம பூமியிலிருந்து தொடங்குவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
<a href=”http://
CM Vijay | “விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் வரப்போகுது..”ஓப்பனாக சொன்ன சவுந்தர்யா ரஜினிகாந்த்#cmvijay |#soundaryarajinikanth |#thanthitv pic.twitter.com/T5h5T0vRT7
— Thanthi TV (@ThanthiTV) May 15, 2026
“>
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு அரசியலில் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றும், சாதாரண மனிதராகவும் உதவிகளைச் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசியல் குறித்துப் பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், “தமிழக முதலமைச்சர் விஜய் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற மிகப்பெரியஎதிர்பார்ப்பில் ஓட்டுப்போட்ட மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; எங்கள் குடும்பத்தின் சார்பாக சிஎம் விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
மேலும், விஜய் தனது பயணத்தில் ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளார் என்றும், இனி வரவிருக்கும் புதிய அரசியல் சவால்களையும் அவர் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
