தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சூரி. இவர் சமீபத்திய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட். தற்போது காமெடி கதாபாத்திரங்களை தவிர்த்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி பற்றி தற்போது காமெடி நடிகர் கொட்டாச்சி கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேட்டி ஒன்றில் ஒரு படத்திற்காக ஒரு சின்ன ப்ரமோஷன் செய்ய வேண்டும் என சூரியிடம் தான் கேட்டதாகவும் அதற்கு சூரி மறுத்துவிட்டதாகவும் கூறினார். வெற்றிமாறன் சாரிடம் நிறைய பேர் துணை இயக்குனர்களாக பணியாற்றி தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உனக்கு பிரமோஷன் செய்து கொடுத்தால் அவர்களும் என்னிடம் வந்து அடுத்தடுத்து உதவி கேட்பார்கள். அதனால் என்னால் செய்ய முடியாது என்று அவர் கூறினாராம்.
அதற்கு நடிகர் கொட்டாட்சி உன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு சின்ன ப்ரோமோஷன் கொடு இல்லையெனில் ஒரு சின்ன வாய்ஸ் மெசேஜ் ஆவது எனக்காக குடு உன் போட்டோவை வைத்து நான் பிரமோஷன் செய்து விடுவேன் என்று கூறினேன். ஆனால் அதற்கு கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உதவி செய்யும்போது நானும் சூரியும் ஒரே அறையில் ஒன்றாக படுத்து தூங்கி ஒரே கல்யாண மண்டபத்தில் வேலை பார்த்து வாய்ப்புக்காக பல பேரின் காலில் விழுந்து இருக்கிறோம். மேலும் அப்படிப்பட்ட ஒரு நண்பனுக்காக கூட அவர் உதவி செய்ய வராதது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
“நான் அப்படி என்ன கேட்டுட்டேன் ஒரு புரமோஷன் தான பண்ணி கொடு நண்பானு கேட்டேன் அது கூட முடியாதா? நீயும் நானும் ரூம் மேட், கல்யாண மண்டபத்துல வேல பாத்துருக்கோம், எத்தன பேர் காலுல விழுந்துருப்போம்.. இப்போ பெரிய ஆளா வளர்ந்துட்டா எங்களலாம் மறந்துடுவியா?” – சூரி மீது கொட்டாச்சி கோபத்துடன்… pic.twitter.com/AYKCEOVOZR
— Polimer News (@polimernews) May 16, 2026
