பணம் மற்றும் சொத்துக்காகத் தன்னை பிளாக்மெயில் செய்துதான் திருமணம் செய்தார்கள் என்ற நடிகர் ஜெயம் ரவியின் பகீர் குற்றச்சாட்டுக்கு, அவரது மாமியார் சுஜாதா மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “2008-ஆம் ஆண்டு விகடன் இதழில் வந்த ஒரு முழுப் பக்க இன்டர்வியூவை நான் தேடிக் கண்டுபிடித்து எடுப்பேன். அதில் யார் யாரை பிளாக்மெயில் பண்ணி, யார் கையை அறுத்துக்கொண்டு திருமணம் செய்யக் கேட்டார்கள் என்ற உண்மை இருக்கிறது” என்று சுஜாதா ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​மேலும் பேசிய சுஜாதா, ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு என்பது முற்றிலும் அவருடைய சொந்த இஷ்டம் என்றும், இதற்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே அமைதி காத்து வந்த ஜெயம் ரவியின் மாமியார், இப்போது பழைய விகடன் ஆதாரத்தை இழுத்து ரவிக்கு கொடுத்திருக்கும் இந்த பகீர் ஷாக், இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.