சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவிமோகன் நடத்திய அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பில், “என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த மூன்று எழுத்து இட்லி நடிகைதான்” என்று கூறி ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்துள்ளார். செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது அவர் பெண்ணியம் பேசுகிறார் என்று ரவிமோகன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேவையில்லாத அவமானங்களைத் தாங்க முடியாமல் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

​”ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னை பிளாக்மெயில் செய்து அடிமையாக வைத்திருந்தனர், கையை அறுத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்துதான் ஆர்த்தி என்னை கல்யாணம் செய்து கொண்டார்” என்று ரவிமோகன் பகீர் தகவலை உடைத்துள்ளார். தன் பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இல்லை என்றும், பல கோடி கடன் இருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக அமைதி காத்ததாகவும் கூறினார். தன் தோழி கெனிஷாவை அனுப்பிவிட்டதாகக் குமுறிய அவர், தனக்கு எதிராக ஏஐ (AI) மூலம் மார்ஃபிங் செய்து சைபர் டார்ச்சர் செய்வதாகவும் வேதனைப்பட்டுள்ளார்.