தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தனக்கு “சினிமா நடிகர்” என்ற பிம்பம் இனி தேவையில்லை என்றும், தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழும் விமர்சனங்களுக்கு ரவி மோகன் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். குறிப்பாகத் தன் பிள்ளைகள் மீதான பாசம் குறித்து எழும் கேள்விகளால் தான் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் குழந்தைகளைப் பார்ப்பதற்குக் கூட தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அமைதியாக இருக்கும் தன்னைச் சிலர் வேண்டுமென்றே சீண்டிப் பார்ப்பதாகக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “நான் நடித்த படங்களில் 95 சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் பெண்களைப் பெருமைப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்துள்ளேன்” என்று சுட்டிக்காட்டிய ரவி மோகன், தன் மீதான அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நீதிமன்ற விவாகரத்து தீர்ப்பு வரும் வரை தனது புதிய படங்கள் எதுவும் திரைக்கு வராது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
