பிரஸ்மீட்டில் தோழி கெனிஷா குறித்துப் பேசிய நடிகர் ரவிமோகன், ஒரு மனிதனுக்குக் கஷ்டம் வரும் போதுதான் நல்ல நண்பர்கள் யாரு என்று தெரியும் என உருக்கமாகக் கூறியுள்ளார். தனக்குக் கஷ்டம் வந்த நேரத்தில் கூடவே நின்று உதவிய பெண்ணுதான் கெனிஷா என்று அவர் பாராட்டியுள்ளார்.
”நான் என்ன அழகுல மயங்கி போயிட்டேனா? நான் பார்க்காத ஹீரோயினா? என் வேலையே அழகான பொண்ணுங்களோட நடிக்கறதுதான்” என்று தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். கெனிஷாவுடனான நட்பு குறித்து அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தை அதிரவைத்து வருகிறது.
