தமிழ் சின்னத்திரையின் மூத்த பிரபல நடிகரான V.C. ஜெயமணி (75) அவர்கள் மாரடைப்பு காரணமாகக் காலமான செய்தி, அவரது ரசிகர்களையும் சின்னத்திரை உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
’மெட்டி ஒலி’, ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட பல முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்து வந்தவர் நடிகர் V.C. ஜெயமணி. குறிப்பாக, குடும்பங்கள் கொண்டாடிய ‘திருமதி செல்வம்’ தொடரில் ‘பூங்காவனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது இயல்பான நடிப்பால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
75 வயதான இவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களைக் அதிர்ச்சியிலும் கண்ணீரிலும் மூழ்கடித்துள்ளது. இவரது மறைவையடுத்து, சின்னத்திரை பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
