சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தாய், போனில் பேசியபடி துணிகளை ஒரு பெரிய பிளாஸ்டிக் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உதவ வந்த அவரது சிறுவன், எதிர்பாராத விதமாகப் பெட்டிக்குள் தவறி விழுந்தான்.

இதை கவனிக்காத அந்தத் தாய், தொடர்ந்து துணிகளைப் பெட்டிக்குள் வீச, ஒரு கட்டத்தில் துணிகளுக்கு அடியில் அந்தச் சிறுவன் முழுமையாகப் புதைந்து போனான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த மூச்சுத்திணற வைக்கும் துணிக் குவியலுக்குள் சிக்கித் தவித்திருக்கிறான் அந்தச் சிறுவன்.

​சுமார் ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, மயக்க நிலையில் இருந்த சிறுவனை மீட்ட பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்து ஏதுமின்றி சிறுவன் தப்பினாலும், அவனுக்கு லேசான மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கவனச்சிதறல் ஒரு நொடியில் எப்பேர்ப்பட்ட விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை!