தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இனி தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் புகார்கள் மற்றும் விசாரணைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் இயங்க வேண்டும் என்பதை உறுதிபடக் கூறிய அவர், போதைப்பொருள் விவகாரத்தில் அரசு சமரசம் செய்துகொள்ளாது என்றும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது இரக்கமின்றி குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் ஆளுங்கட்சியான தவெக-வினர் எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது எனத் தன் கட்சி நிர்வாகிகளுக்கே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.