அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2021-ல் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, கட்சியை எஃகு கோட்டையாகக் காக்க தான் சந்தித்த போராட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், சோர்ந்துவிடாமல் மீண்டும் தமிழகத்தில் அதிமுக-வின் பொற்கால ஆட்சியை மலரச் செய்ய அரும்பணியாற்றுவோம் என அவர் சூளுரைத்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் மேலும் வலுப்பெறக் கழக உடன்பிறப்புகளும் நிர்வாகிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பாசத்துடன் கேட்டுக்கொண்டுள்ள இபிஎஸ், அதிமுக-வின் வெற்றிப் பயணத்தை நோக்கி மீண்டும் நகர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மக்களின் நல்வாழ்வே பிரதானம் என்ற லட்சியத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், வரும் காலங்களில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் அரியணை ஏறும் என்ற நம்பிக்கையைத் தனது தொண்டர்களிடம் விதைத்துள்ளார். அதிமுக-வுக்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக-வின் வருகை என அரசியல் களம் பரபரப்பாக உள்ள சூழலில், எடப்பாடியின் இந்த ‘சென்டிமென்ட்’ அறிக்கை அதிமுக கூடாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத… pic.twitter.com/gMkAj4vPzQ
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 14, 2026
“>
