கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள ஒரு ஜிம்மில், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாகத் தோல் பட்டையில் இடித்துக்கொண்ட சிறிய விவகாரம், ஒரு இளைஞர் ஐசியூவில் உயிருக்குப் போராடும் அளவுக்குப் பெரிய வன்முறையாக மாறிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

கீர்த்தன் என்ற வாலிபர் ஜிம்மில் பயிற்சி செய்தபோது, வருண் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீரென மோதலாக மாறியது. இதில் வருண் ஆவேசமாக கீர்த்தனின் தலையில் பலமாகத் தாக்கியதில், அவர் அடுத்த நொடியே மயங்கி தரையில் விழுந்தார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் கீர்த்தனின் மண்டை ஓட்டில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு, மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் உண்டானதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் அறிக்கைகளும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய மோதல் இப்படி ஒரு இளைஞரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.