பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது குடியிருப்பு வளாகத்தில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை வந்து வேலை செய்யும் ஒருவருக்கு மாதம் 3,500 ரூபாய் ஊதியம் என்பது மிக அதிகம் என்று அவர் வாதிட்டுள்ளார்.

மேலும் அண்டை வீடுகளில் வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதால், தங்கள் வீட்டு வேலை செய்பவர்களும் அதிக ஊதியம் கேட்பதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வெளியானவுடன், பல தரப்பிலிருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் பெங்களூரு போன்ற ஒரு பெருநகரத்தில் தற்போதைய விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், இந்த ஊதியம் மிகவும் குறைவானது என்றும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்குவதே முறை என்றும் சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டு வேலை செய்பவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இது போன்ற ‘ஊதியக் கட்டுப்பாடுகளை’ விதிக்கக் கூடாது என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.