ரயிலில் டிக்கெட் இல்லாமல் தன் குழந்தையுடன் பயணம் செய்த ஒரு பெண்ணிடம், மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட டிடிஇ ஒருவரின் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் பரிசோதனையின் போது அந்தப் பெண் டிக்கெட் எடுக்காதது தெரியவந்தும், அவர் ஒரு கைக்குழந்தையுடன் இருப்பதை உணர்ந்த அதிகாரி, அவருக்கு அபராதம் விதிக்காமல் அப்படியே செல்ல அனுமதித்துள்ளார்.
சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு தாயின் நிலையை உணர்ந்து அவர் செய்த இந்த உதவி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து ‘எக்ஸ்’ தளத்தில் பகிர, அது தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
<a href=”http://
ट्रेन में बिना टिकट के अपने बच्चे के साथ सफर कर रही थी महिला, टीटी ने मानवता के आधार पर जाने दिया और चालान नहीं बनाया। pic.twitter.com/PPb0krGH1m
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) May 12, 2026
“>
“கடமை முக்கியம்தான், ஆனால் அதைவிட மனிதாபிமானம் பெரியது” என்று நெட்டிசன்கள் அந்த டிடிஇ-யை பாராட்டித் தள்ளி வருகின்றனர். அதிகாரிகளின் இதுபோன்ற கனிவான செயல்கள் சமூக வலைதளங்களில் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கி, பலருடைய இதயங்களையும் வென்றுள்ளது.
